முன்பு உப்புகார செட்டி என்று ஓர் இனம் இருந்தது.முன்பு உப்பு மிளகாய் கழுதை மேல் ஏற்றி விற்பார்களாம் .முன்பு சைவமாக இருந்தார்களாம் .அவர்கள் ஏழு கும்பல்களாக பிரிந்து எல்லா இடமும் சென்று வியாபாரம் செய்து வந்தார்கள் .அவர்களிடம் வெள்ளி பிள்ளையார் ஒன்று இருந்தது.அப்பிள்ளையாரை வாரம் ஒரு கும்பல் வைத்து இருக்கும் அடுத்த வாரம் மற்றொரு கும்பலிடமும் என்று ஏழு கும்பலிடமும் பிள்ளையாரை மாறி மாறி வைத்து கொள்வார்களாம் .இவர்களின் தலைவன் ராஜ சேனாதிபதி செட்டி .அப்போது நவாப் கொள்ளை நிறைய அடித்தான்.அப்போது ஏழு கும்பல்களும் பிரிந்து இரண்டு மாதம் கழித்து ஒன்று கூடினர் அப்போது வெள்ளி பிள்ளையார் தொலைந்துபோய் விட்டது என்றனர் சோதனை போடுகையில் பிள்ளையார் இருந்தது பொய் சொன்னவனை மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அனுப்பினார்களாம் .
செட்டியின் பிரிவுகள்
நாட்டு கோட்டை செட்டி,பேரி செட்டி, அச்சரபாக்கம் செட்டி ,வடம் செட்டி,ஆயுதம் செட்டி, வெள்ளாள செட்டி, சோழி செட்டி,ஆயிரம் செட்டி, வைசியர் செட்டி, கோமுட்டி செட்டி.
கோமுட்டி செட்டிக்கு சாமர்த்தியம் ஜாஸ்தி , ஆத்தோடு செட்டி போனாலும் ஆதயத்தோடு தான் போவான்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக