வியாழன், 24 மார்ச், 2011

சிதம்பர இரகசியம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முன்பு நடராஜர் என்ற துறவி இருந்தார் ,கோயிலில் சதா சர்வ காலமும் இருப்பார்,அவர் மீது பொறாமை கொண்டவர்கள் அவரை திருடன் என்றும் பைத்தியக்காரன் என்றும் திருமலை நாயக்கரிடம்  கோள் முட்டினார்கள் .ஒரு நாள் மன்னன் கோயிலுக்கு வந்து நடராஜரிடம் இன்று என்ன திதி என்று கேட்க அம்பாளையே முழு மதியாக பார்த்து கொண்டு இருந்த நடராஜர் பௌர்ணமி என்றார் .அன்று அமாவாசை இது கேட்ட திருமலை நாயக்கர் இரவு 3 3 /4  நாழிகை (1 1/2  மணி ) குள் நிலா வானத்தில் தோன்றா விட்டால் நெருப்பின் மேல் உரி கட்டி இறக்கப்படுவீர் என்றான் .அப்போது தான் நடராஜர் "நடராஜர் பத்து" பாடினார் அப்போது அம்பாள் காற்சிலம்பை எடுத்து வீச வானத்தில் நிலவு போல் தெரிந்தது ஆடு கண்டதும் தவறு செய்து விட்டோம் என்று மன்னன் வருந்தினான் 
.அதன் பிறகு மதுரையை விட்டு நடராஜர் சிதம்பரம் வந்தார் அங்குள்ள தேவர் அடியாருடன் நடனப்போட்டி நடந்தது இருவரும் திறமையாக ஆடினார்கள் நடராஜர் துறவி அவருக்கு அச்சமில்லை தலைக்கு மேலே    ஒரு காலை  தூக்கி ஆடினார்  அந்த அம்மாள் அதே போல் காலை தூக்க பாவாடை தடுத்தது அச்சத்தால் காலை தூக்கமுடியவில்லை காலை கீழே வைத்து நின்று விட்டார் இதுதான் உண்மையில் நடந்தது சிதம்பர ரகசியம் இதுதான் ..
       
சிதம்பரத்தில் உள்ள கோயிலில் உள்ள ஸ்ரீ மூல நாதர் ( லிங்கம் ) தான் திருமூலர் சமாதியாகும் .
     




தகப்பனும் மகளும் சேர்ந்து உண்டாக்கிய உலகம்

சிவன் சக்தி சிருஷ்டி கர்த்தாவும் ,மும்மூர்த்திகளும் கலந்து யோசித்து 
உத்வேகம் கொண்டு இருந்தார்கள் .  இப்படி இருக்கையில் உலகை யாராலும் அழிக்க முடியாது . தாயால் தான் அழிக்க முடியும் என உணர்ந்து 
தண்ணீரை   பெருவெள்ளமாக்கினார்கள்.தாயும் மகனும் ஒரு பக்கம் ஓடினார்கள் .
விதைகள் நீக்கப்பட்ட சுரக்குடுவையின் உள்   தகப்பனும் மகளும் தண்ணீருக்கு 
பயந்து  புகுந்தனர்.உலகத்தில் உள்ள அனைவரும் அழிந்தனர்  .
48 நாட்கள் கழித்து சுரைக்குடுவை உள் இருந்த இருவர் மட்டும் தப்பினார்கள் 


மகாவிஷ்ணு கருட அவதாரம் எடுத்து  உலகை நல்லவிதமாக படைக்க 
சுற்றி பறந்துவரும் சமயம்   தகப்பனை பார்க்கையில் விபூதியை கையில் 
வைத்துகொண்டு  சிவா சிவா என்று கூறிக்கொண்டு இருந்தவரை பார்த்து இந்த ஒருவனை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்  என எண்ணி ரக்கையால் அடிக்க போகையில் கழுத்தை கெட்டியாக பிடித்துகொண்டு 
உலகமே அழிந்து விட்டது எங்களை மட்டும்   ஏன் வைத்துள்ளாய் என்னையும் 
என் மகளையும்  அழைத்து கொண்டு போ என்று கூறினார் ( அவர் திருநீர் கையுடன் 
கருடனை பிடித்த்தால் தான் கருடன் கழுத்து வெள்ளையானது ) . ஒரு ஆணையும் பெண்ணையும் 
நீதிக்கு புறம்பாய் கொல்வது  பாவம் என விடு விட்டார் . இதைப்பற்றி மகாவிஷ்ணு சிவனிடம் கூறினார். அப்போது அவர் அந்த இருவராலும் உலகம் உண்டாகட்டும் காமத்துக்கு கண் இல்லை ,செத்த நாய் என்றில்லை பெத்த பிள்ளை என்றில்லை என கூறி நான்காவது உலகத்தை படைபித்தார்.
இப்படியாக உலகில் மக்கள் அதிகமாக ஒழுக்கமாக தாய், தந்தை என உறவு முறைகளை உண்டாக்கி வளர்ந்து வந்தது .மனிதனுடைய அறிவு ஒழுக்கம் திறமைகளாலும் நன்மை, தீமை என உணர்ந்து பல கடவுள்களும் உண்டாகி உள்ளது       
      

புதன், 23 மார்ச், 2011

துறவி

 பற்று அற்றவர்கள் துறவிகள் .
முற்றும் துறந்த முனிவர்கள் .
இவர்களின் அன்பை பெற்றவர்களிடம் எந்த துன்பமும் நெருங்க அஞ்சுமாம் .
துறவிகளின் அன்பை பெற்றவர்களுக்கு எந்த பிராயசித்தமும்    தேவையில்லை .

செவ்வாய், 22 மார்ச், 2011

செட்டியார்கள் குறித்து சுவாமிகள் கூறியது

முன்பு உப்புகார செட்டி என்று ஓர் இனம் இருந்தது.முன்பு உப்பு மிளகாய் கழுதை மேல் ஏற்றி விற்பார்களாம் .முன்பு சைவமாக இருந்தார்களாம் .அவர்கள் ஏழு கும்பல்களாக பிரிந்து எல்லா இடமும் சென்று வியாபாரம் செய்து வந்தார்கள் .அவர்களிடம் வெள்ளி பிள்ளையார் ஒன்று இருந்தது.அப்பிள்ளையாரை வாரம் ஒரு கும்பல் வைத்து இருக்கும் அடுத்த வாரம் மற்றொரு கும்பலிடமும் என்று ஏழு கும்பலிடமும் பிள்ளையாரை மாறி மாறி வைத்து கொள்வார்களாம் .இவர்களின் தலைவன் ராஜ சேனாதிபதி செட்டி .அப்போது நவாப் கொள்ளை நிறைய அடித்தான்.அப்போது ஏழு கும்பல்களும் பிரிந்து இரண்டு மாதம் கழித்து ஒன்று கூடினர் அப்போது வெள்ளி பிள்ளையார் தொலைந்துபோய் விட்டது என்றனர் சோதனை போடுகையில் பிள்ளையார் இருந்தது பொய்  சொன்னவனை  மொட்டை  அடித்து  கரும்புள்ளி  செம்புள்ளி குத்தி அனுப்பினார்களாம்  .
 
செட்டியின் பிரிவுகள் 
நாட்டு கோட்டை செட்டி,பேரி செட்டி, அச்சரபாக்கம்   செட்டி ,வடம் செட்டி,ஆயுதம் செட்டி, வெள்ளாள செட்டி, சோழி செட்டி,ஆயிரம் செட்டி, வைசியர் செட்டி, கோமுட்டி செட்டி.

கோமுட்டி செட்டிக்கு சாமர்த்தியம் ஜாஸ்தி , ஆத்தோடு செட்டி போனாலும் ஆதயத்தோடு தான் போவான்      



 .
       

திங்கள், 7 மார்ச், 2011

குரு நம்பிக்கை

  குருவை சதா மானசீகமாக நினைப்பவனுக்கு ஒன்றுமே கஷ்டங்கள் வாராது .குருவானவர் அவைகளை தாங்கி கொள்வார் .தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விடும், தோளுக்கு அருகில் வரும் கடைசியாக காலுக்கு பக்கத்தில் போய் விழுந்து விடும்.

குருவின் மேல் சதா ஒரே நிர்ணயமாய் இருப்பவனிடம் , குருவும் தன்னை சதா நினைப்பவனை பற்றி நினைக்கும் போது ( குரு , பக்தன் )  இருவர்   மனமும்  ஒன்று  கலக்கும்  போது   பிரம்மா தேவன் எழுத்தையே முறியடித்து விடுமாம். ஆகையால் சதா குருவையே நினைத்து வருபவனிடம் நிர்ணயத்தை கலைபதற்கு பிரம்மா தேவன் மாயவை அனுப்பி குருவை நினப்பவனுடைய மனதில் சபலத்தை எழுப்பும் , இன்னல்களை கொடுக்கும், வாட்டும் .இச் சோதனைகளை எல்லாம் வென்றும் எல்லாம் குருவே என் செயல் ஒன்றும் இல்லை , தனது என்று ஒன்றும் இல்லாத நிலை , பற்றுஅற்ற நிலை ஏற்படுத்திகொண்டவனுக்கு குருவே தான் சகலமும் . குருவேதான் பசியாற்றுவார் குறைகளையும் தவிர்ப்பார்கள். 
என் செயலால் ஆவது ஒன்றும் இல்லை எல்லாம் சற்குருநாதரே , தான் அவருடைய கருவியாக உள்ளேன் என்பான் .

( ஓடி பிழைத்தாலும் குரு வேண்டும் ( 9 ல் குரு இருக்க வேண்டும் )

கஷ்டத்திலும் நம்பிக்கை இழக்காமல் இருபது தான் புண்ணியம் .
நம்பிக்கை தான் பொறை மோர் .
பூரண  நம்பிக்கை இருந்தால் தான் எல்லாம் கிடைக்கும் .
தேகத்தை வருத்தியாகிலும் நல்லது செய்யவேண்டும் .
பொறுமையை கடைபிடிக்க வேண்டும் .
    

            

பூக்களின் சிறப்பு

வெள்ளை அரளி ,தும்பை பூ சிவனாருக்கு சிறப்பு 
எருக்கன் மாலை பிள்ளையார், தாய்க்கு சிறப்பு 
ரோஜா இராமலிங்க சுவாமிகளுக்கு  சிறப்பு 
வெள்ளை அருகம்புல் மாலை - பிள்ளையாருக்கு சிறப்பு     

சைவம் அசைவம்

சைவ உணவு சாப்பிடுகிறவர்க்கு  கோபம் சீக்கிரம் வரும் , சீக்கிரம் குறையும் .
அசைவ உணவு சாப்பிடுகிறவர்க்கு கோபம் சீக்கிரம் குறையாது .

மாமிசம் என்று நினைத்தால் மாமிசமாகும். உலகத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் கடவுள் என்று சாப்பிட்டால் நாய் மாமிசம் பதார்த்தமாகும் .

செவ்வாய், 1 மார்ச், 2011

மதனகாமப்பூ

   ஒரு ராஜாவும் மந்திரியும் ஒரு நாட்டில் இருந்தார்கள் இருவருக்கும் ஒரே வயது நல்ல நண்பர்களாகவும் இருந்தார்கள்.இருவருக்கும் திருமணம் முடிந்தது .
இருவரும் பெண் கொடுத்து பெண் எடுப்பது என்று சத்தியம் செய்து கொண்டனர் .சிறிது காலம் கழித்து ராஜாவிற்கு மூன்று பெண்களும் மந்திரிக்கு ஆண் குழந்தை ஆமையாக பிறந்தது.
குழந்தைகள் பருவமடைந்தார்கள்.ஏற்கனவே செய்த சத்தியத்தின்படி மந்திரி ராஜாவிடம் பெண் கேட்டான்.அரசன் தருகிறேன் என்று ஏமாற்றி இரு பெண்களை வேறு இடத்தில் மனம் செய்து கொடுத்தான் இறுதியாக ஏமாற்ற என்ன செய்யலாம்  ஆமைக்கா  பெண் கொடுப்பது என்று இருந்தான்.இளவரசி திட்டம் தீட்டினாள் மந்திரி மகன் மதனகாமப்பூ எடுத்து வந்தால் மணப்பதாக கூறினாள்  

மதனகாமப்பூ  கடலில் உள்ள ஏழு கன்னிகளில் இளையவளிடம் உள்ள பூ யாரும் அங்கே செல்ல முடியாது அப்படியே போனாலும் உயிரோடு திரும்பி வரமுடியாது எனவே அவ்வாறு கூறினாள்.  மந்திரி மகன் இதை கேட்டவுடன் மணந்தால் ராஜாவின் மகளை மணப்பது இல்லையேல் மரணமடைவது என்று  முடிவு செய்தான்.தந்தையிடம் என்னை கடலில் போட்டு விடுங்கள் நான் மதனகாமப்பூவுடன் வருகிறேன் என்றான் . மந்திரி கவலையுடன் கடலில் சென்று போட்டு வந்தான் .

ஆமை நீண்ட நாட்கள் கடலில் நீந்தியது.ஒருநாள் சூரியனை அடைந்து சூரியனுக்கு தெரியாமல் அவனது ஆயுதத்தை மறைத்து வைத்து விட்டது .சூரியன் ஆயுதத்தை கேட்க எனக்கு தேவையானதை கொடுத்து விட்டாயானால் தருகிறேன் என்றது ஆமை .என்ன வேண்டும் என்று சூரியன் கேட்க தன் வாழ்கையும் மதனகாமப்பூ பற்றியும் ஆமை  சூரியனிடம் கூறியது
அதை கேட்ட சூரியன் அது என்னிடம் இல்லை ஏழு கன்னிகள் இருக்குமிடத்தில் இளைய கன்னியிடம் உள்ளது உனக்கு எனது சக்தியை தருகிறேன் நீ நினைத்தபோது மனித ரூபத்தை அடையலாம் என் கவசங்களையும் நீயே வைத்துகொள் என்று சூரியன் கூறியது மேலும் மதனகாமப்பூ எடுக்கும் உபாயத்தை கூறியது காலையில் ஏழு கன்னிகள் குளிக்கும் போது நீ அவர்களுடைய துணிகள் அனைத்தையும் எடுத்து ஒளித்து வைத்துவிடு அவர்கள் என்ன பயமுறுத்தினாலும் கொடுக்காதே இறுதியில் என்ன வேண்டும் என்று கேட்பார்கள் மதனகாமப்பூ வேண்டும் என்று கேள் ஏன் என்று கேட்டால் உனது கதையை கூறு என்றது சூரியன் அவ்வாறே செய்தது ஆமை .அச்சத்தில் வெளியே வர இயலாத கன்னிகள் மதனகாமப்பூ கொடுப்பதாக சத்தியம் செய்தபின் ஆமை துணிகளை கொடுத்தது .பின்பு அவர்களிடம் மதனகாமப்பூ பெற்று மேலும் பல வரங்களையும் பெற்று வந்தது .
ஆற்றங்கரையில் ஓரத்தில் உள்ள   மரப் பொந்தில் சூரியன் கொடுத்த கவசங்களை மறைத்து வைத்து நாட்டுக்குள் வந்தது .மதனகாமப்பூ கையில் இருந்ததால் நீண்ட தூரத்திற்கு வாசனை கமகம என்று வந்தது. பேசியபடியே மன்னன் பெண்ணை அழுதுகொண்டே மணம் முடித்து வைத்தான்.மந்திரிகுமாரன் யாருமில்லாதபோது உருமாறி வாழ்ந்து கொண்டு இருந்தான் .காலையில்  உருமாறி குளியல் அறைக்கு சென்று  சுடுதண்ணீரில் நன்கு குளிப்பான்.
சிலநாட்கள் கழித்து பக்கத்துக்கு நாட்டரசன் படை எடுத்து வந்தான் இரு மருமகன்களும் சண்டையிட்டு தோற்று திரும்பினர் அப்போது மந்திரி குமாரன் மரத்தின் பின் மறைந்து தோற்று திரும்பியவர்களையும் படையினரையும் பார்த்து குரல் கொடுத்தான் மற்றவர்கள் அசரீரி என்று நினைத்தனர் .அப்போது அவன் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் உங்கள் காதுகளின் முனைகளை அறுத்துகொண்டால் ஜெயிப்பீர்கள் என்றான் அனைவரும் அப்படி செய்ய மந்திரி குமாரன் உருமாறி போரிட்டு நாட்டை மீட்டான்.ஒருநாள் மந்திரிகுமாரன் மனைவி சதிதிட்டம் தீட்டினாள் குளியல் அறையில் அவன் குளிக்கும் போது நெருப்பு வைத்துவிட்டாள்.    சூரியனிடம் வரம் பெற்றதால் நெருப்பு ஒன்றும் செய்யவில்லை அப்போதுதான் அவன் தன்  அழகான சொருபத்தை காட்டினான் .
மனைவி செய்த தவறுக்கு மனமார மனிப்பு கேட்க மந்திரி குமாரன் அவளை மன்னித்து ஏற்றுக்கொண்டான் . 
            .
       

திருவண்ணாமலை மகத்துவம்

வல்லாளன் என்ற அரசன் ஆண்டுவரும் காலத்தில் அண்ணாசாமி என்ற சாமியார் எப்பொழுதும் மலையை சுற்றிக்கொண்டு இருப்பாராம். (வல்லாளன் கஞ்சன்,குழந்தை பாக்கியம் இல்லை )  சுவாமிகளை பார்த்து ஏன் சுற்றுகிறீர்கள் என்று கேட்க கடவுளை சுற்றி வருகிறேன் என்றார் சாமியார்.எனக்கு காட்டுகிறீர்களா என்றான் அரசன், நீயும் தொடர்ந்து சுற்று கடவுள் காட்சி அளிப்பார்கள் என்று சுவாமிகள் கூறினார்.அரசனும் தொடர்ந்து சுற்ற ஒருநாள் பெரிய மின்னல் மலையின் உச்சியில் இருந்து கீழ்வரை தெரிந்தது அதுதான் அடிமுடிகண்ட உண்ணாமலையுடன் கூடிய அண்ணாமலை என்றார் சுவாமிகள்     அரசன் வேண்டியபடி குழந்தை அவனுக்கு பிறந்தது பின் தான தருமங்கள் நிறைய செய்து அண்ணாமலையாருக்கு கோயில் கட்டினான் .

 அந்த மின்னல் தெரிந்த அன்றுதான் கார்த்திகை தீபம் என்கிறோம் .அன்றுதான் திருவண்ணாமலை ஜோதி என்று நம் சுவாமிகள் கூறினார்.