வெள்ளி, 24 டிசம்பர், 2010

கர்ப்பிணி

கர்ப்பிணி.

தாய்பால் கொடுத்தால்   குழந்தைக்கு ஆசைகள் வளர்ந்து வரும்..

     வாயில் எச்சில் ஒழுகும்   குழந்தை நன்றாக பேசும். வாந்தி எடுக்கும் குழந்தைக்கு வளர்ச்சி அதிகம்.

   கர்ப்பிணி சூரியகிரஹ இருளை   பார்க்க கூடாது பார்த்தால் குழந்தையின் மூளையை பாதிக்கும்.
     ஏழுமாத கர்ப்பமாக இருந்தால்   சூரியகிரஹணம் ஒன்றும் செய்யாது.சூரியகிரஹணத்தில் குழந்தை பிறந்தால் அம்சமாக   வளரும்.
     வலதுகால் சுண்டுவிரலில் காப்பு   கட்டி எடுத்த கீழாநெல்லிசெடியை வேருடன் பிடுங்கி கட்டினால் சுகப்பிரசவம் ஆகும்.
     பிரசவ அவதிபடும் பெண் தன்னை   மறந்த நிலையில் சிவ சிவா என்று உணரும் போது தாய் வேறு குழந்தை வேறாகிறது.
     அழும் குழந்தையும் வாயில்   விரல் சப்பும் குழந்தையும் பிற்காலத்தில் நனறாக இருக்கும் .
   குழந்தை மாலையிட்டு பிறந்தால்   மாமனுக்கு ஆகாது கொடிசுத்தி பிறந்தால் கோத்திரத்திற்கு ஆகாது .
     மூல   நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை மிகவும் செல்வாக்காக வளரும்.திருமண காலத்தில்  மாமனாரை பாதிக்கும். தனித்தனியாக இருந்தால்   பாதிக்காது.ஒரே குடும்பமாகஇருந்தால் தொல்லைகள் கொடுக்கும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக