வெள்ளி, 3 செப்டம்பர், 2010

ஒம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் அருளுரைகள்




1) பெண்கள் திருநீர் வாங்கும் போது முந்தானையின் மேல் வலது கை வைத்து வாங்க வேண்டும்.

2) வலது கையில் வாங்கும் திருநீரை அப்படியே பூசிக் கொள்ள வேண்டும்.இடது கையில் போடக்கூடாது போட்டால் புண்ணியம் அந்த இடத்திலேயே போய்விடும் பேப்பரில் போட்டு கொள்ளலாம்.

3) துறவியிடம் வரம் வாங்குவது எப்படி? தங்கத்தையும் செப்பையும் இணைப்பது எப்படி? இரண்டையும் உருக்கினால் தான் ஒட்ட முடியும்அதே போல் இரண்டு மனமும் உருக வேண்டும் மனிதனுக்கு நம்பிக்கை என்பது முக்கியம் அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் துறவியிடமிருந்து வரம் கிடைக்கும் பூஜைகளால் கடவுள் கிடைப்பதில்லை நம்பிக்கையால் தான் மட்டும் தான் கிடைப்பார்.

4) பாவம் செய்து விட்டு காசிக்கு சென்றல் பாவம் போகாது செய்த தவறுக்கு மனம் வருந்தி மனதார மன்னிப்பு கேட்டால் போதுமானது.

5) கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. திருஷ்டி சுற்றி போடசிறிய துணியில் நல்ல எண்ணை விட்டு நனைத்து அதை தேங்காய் குடுமியில் சுற்றி அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி தேங்காயை முக்கூட்டில் உடைக்கவும். குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க எலுமிச்சை பழத்தை 4 துண்டாக நறுக்கி உள்ளே குங்குமம் வைத்து அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி பிழிந்து 4 துண்டுகளையும் 4 திசைகளில் எறிய வேண்டும் குங்கும சாந்தை குழந்தைகளுக்கு பூச திருஷ்டி விலகும் பிரதி ஞாயிறு தோறும் செய்யவும்.

6) வீட்டில் ஒரு துளி கஸ்தூரி இருந்தாலே வீடு இலட்சுமிகரமாக இருக்கும் .

7) பந்தி பரிமாறுவதை விட மக்கள் சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பதுதான் விசேஷம்.

8) கொடுமுடி பார்க்காதவன் கொடும்பாவி மதுரை பார்க்காதவன் மாபாவி.

9) காசியில் நீராடுவதை விட கொடுமுடியில் நீராடுவது விசேஷம்.

10) மந்திரங்கள் அனைத்தும் கரும காண்டம் மனமது செம்மையானால் மந்திரம் எதற்கு?

11) குடும்பத்திற்கு வரும் பெண் (மனைவி) எல்லோரையும் தன் கூட பிறந்தவர்களைப் போல் பாவிக்க வேண்டும்,எப்போதும் பொறுமையுடனும் கோபப்படாமலும் இருக்க வேண்டும்.

12) சம்பாதிக்கும் பணத்தில் 5 ல் ஒரு பங்கை தர்மம் செய்யவும் ஒரு பங்கை சேமித்து வைக்கவும் மூன்று பஙகை செலவுக்கு வைத்து கொள்ளவும் சேமித்து வைக்கும் பங்கு கஷ்ட காலத்தில் உதவும் தர்மம் செய்யும் பங்கு மறு ஜென்மத்தில் உதவும்.

13) உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது மற்றபடி ஜப தவங்கள் எல்லாம் கர்ம வினைகளை போக்காது வீட்டிலே இருந்தாலும் கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமாற வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை கொண்டு செல்ல வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள் வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது சிறந்தது இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.

14) சுவாமிகள் கூறும் அறுபடை வீடுகள் 1) சுண்டூர் 2) திருப்பதி மலை, 3) மதுரை திருப்பரங்குன்றம் 4) வெள்ளியங்கரி 5) திருச்செந்தூர் 6) பழனி.

15) ஒரு வியாபார ஸ்தலத்தில் அமர்வது மேற்க்கு முகம் அல்லது தெற்க்கு முகம் பார்த்து அமர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக