வெள்ளி, 6 ஜனவரி, 2023

Sandur சுண்டூர்

சுண்டூர் கர்நாடகா பெல்லாரி அருகே உள்ளது. சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கூறியது. மஹாவிஷ்ணு மாம்பழம் சிவனிடம் கொடுத்தார். யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ அவருக்கு மாம்பழம். முருகன் உடனடியாக மயிலுடன் கிளம்பினார் உலகை சுற்றிவர ( மஹாவிஷ்ணு வின் எண்ணம் முருகன் பார்வை,காலடி உலகம் முழுதும் படவேண்டும்) பிள்ளையார் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. மஹாவிஷ்ணு ஏன் சும்மா உட்கார்ந்து இருக்கிறாய் அம்மை அப்பனை சுற்றி வா என்று சைகை செய்தார். பிள்ளையார் சிவன் பார்வதிதேவி யை சுற்றி வந்து பழத்தை பெற்றார். ஆனால் சாப்பிடவில்லை. தம்பி வரட்டும் கொடுக்கலாம் என்று கையில் வைத்து இருந்தார். முருகர் உலகை சுற்றி வந்தார். விநாயகர் கையில் பழம் இருப்பதை பார்த்து கோபம் கொண்டு ( பழனி செல்ல வில்லை) சுண்டூர் சென்றார். எல்லோரும் சமாதானம் செய்தும் கோபம் அடங்கவில்லை. தாய் பார்வதி பாலை கொடுத்து வளர்த்தேனே என்று கூற பாலை வாந்தி எடுத்து கக்கினார். கோபம் அடங்கவில்லை. தகப்பன் சிவன் உன் உடம்பில் ஓடு வது என் இரத்தம் தானே என்று கேட்க, இரத்தம் முழுவதும் கக்கினார். ஏனப்பா இப்படி செய்துவிட்டாய், ஏற்றுக்கொள் என்று கூற. கோபம் குறைந்தது. பாலை ஏற்றுக்கொள்ள பார்வதி கூற " அம்மா இது பால் அல்ல பஞ்சாட்சரம் இதை நெற்றியில் அணிந்தால் சகல பாவங்களும் நீங்கும்" என்று நெற்றியில் அணிந்து ஏற்றுக்கொண்டார். அம்மாவை ஏற்றுக்கொண்டாய், என்னையும் ஏற்றுக்கொள் என்று சிவன் கேட்க" இரத்தத்தை சிகப்பு ஆடையாக "முருகன் கட்டிக்கொண்டு ஏற்றார். அதனால் தான் துறவிகள், சாமியார் கள் செவ்வாடை கட்டுவது. சாளுக்கியமஹாராஜா கட்டிய கோயில். கோயில் சுற்றி ஒரே சிகப்பு மண்ணாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் தோண்டினால் சிகப்பு மண்ணுக்கு நடுவே வெள்ளை வெளேர் என்ற விபூதி கிடைக்கும். தமிழ் நாட்டின் உள்ளே அறுபடை வீடு இருக்க வேண்டும் என்று பழமுதிர் சோலை யையும், திருத்தணி சேர்த்து விட்டனர். பழனி முருகன் கடைசி அறுபடை வீடு. நாம் வேண்டும் நல்லன எல்லாம் முருகன் கொடுப்பார். அடுத்த அறுபடை வீடு திருப்பதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக