விழிப்புடன் தன் மனதையே கவனிக்க பழகியவர்கள் மனத்திலே எழும ஆசையை அதன் நுண்ணிய வடிவத்திலேயே கண்டு பிடித்து காரியமாக வடிவெடுக்கும் முன் காரண நிலையிலேயே கட்டுப்படுத்தி அழித்து விடுவதுதான் நல்லது. விழிப்பும் விவேகமும் இருந்தால் ஒழிய இது சாத்தியமாகாது.
செவ்வாய், 14 மார்ச், 2017
எவ்வளவு பொருளை அற வழியில் செலவு செய்தோமோ அவ்வளவு மட்டும் நம்முடைய பொருள்.
நாம் எந்த வேளையில் எதை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆகிறமோ அந்த வேளையில் சுவாமிகள் அதை நமக்கு வழங்குகிறார்.
வேண்டுபவர்களுக்கு வேண்டியதை முறையாக வகுத்தளிக்கவல்ல வள்ளல் நம் சுவாமிகள்.
வேண்டுபவர்களுக்கு வேண்டியதை முறையாக வகுத்தளிக்கவல்ல வள்ளல் நம் சுவாமிகள்.
குடும்பத்தில் தந்தை எவ்வளவு சிறப்பு இயல்புகளை உடையவராய் விளங்கியிருந்தாலும் தாயார் உடைய இயல்புகளுக்கு ஏற்பவே அவருடைய மக்கள் பெரும்பாலும் அமைகின்றனர். மகன் அறிவு தந்தை அறிவு என்று கூறப்பட்டிருப்பினும், தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை என்னும் பழமொழியே உண்மையாகி விடுகிறது.
தர்மம் செய்யும் குடும்பம் என்றைக்கும் குறையாது.இப்போது தெரியாது பின்னால் தெரியும்.
நாம் சுவாமிகளிடம் தினமும் வேண்ட வேண்டியது நான் என்ற ஆணவ எண்ணம் வராமல் இருக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும்.
என்றென்றும் காற்றாக உலவிக்கொண்டு இருக்கும் துறவிகள் சித்தர்கள் முனிவர்கள் சமாதியை அங்கபிரதட்சினம் செய்தால் எல்லா கஷ்டங்களையும் குறைகளையும் நீக்கும். முழு நம்பிக்கையுடன் செய்யவேண்டும்.
சுவாமிகளை நோக்கி நாம் ஓர் அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார்.
ஐந்து பேர் சேர்ந்து எப்பொழுதும் தாலி வாங்கி கொடுத்தால் மிகவும் நல்லது.இரண்டரை வராகன் எடையில் தாலி செய்யவும். ஐந்து கிராம் எடைக்கு மேல் இருக்கவேண்டும். சுவாமிகள் இதனை எப்பொழுதும் கடைபிடிக்க சொல்வார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)