திங்கள், 18 ஜனவரி, 2016


அனைத்தும் சுவாமிகள் திரு அருளால்தான் நடைபெறுகிறது ,என்று நினைப்பது   பண்பட்ட உள்ளத்தின் அடையாளம் .
சுவாமிகள் கஷ்டங்களை கொடுக்கிறார்.

 அந்த கஷ்டத்திலும் யாதோ நன்மை இருக்கத்தான் செய்கிறது .

அந்த நன்மையை நாம் உணரவேண்டும் .
அச்சம், ஆசை, மர்மம் இம்மூன்றையும் போக்கினால் தான் தெரியும் .
அதற்கும் நேரம் வர வேண்டும் .
இம்மூன்றையும் விட்டால் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் மனம் நிதானமாக இருக்கும் , இரண்டையும் சமமாக நினைக்கும் மனம் வரும் .

இம்மூன்றையும் அடக்கினால் கடவுளை சீக்கிரம் அடையலாம் .

வைராக்கியம், விடா முயற்ச்சி, சிரத்தை முக்கியமானவை .
சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும், கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல், கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும் . இன்பத்தையும் ,துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும்.
ஆனந்தம் ,கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார் .
அச்சமும் ஆசையும் அறிவுள்ளவர்களுக்கு இல்லை .
அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம் . 
அனைத்தும் சுவாமிகள் திரு அருளால்தான் நடைபெறுகிறது,
 என்று நினைப்பது   பண்பட்ட உள்ளத்தின் அடையாளம் .
சாதகமான சூழ்நிலையோ , பாதகமான சூழ்நிலையோ எது நேர்ந்தாலும் சுவாமிகள் திருவடிகளை மறக்காமல் இருப்பதே எவ்விதத்திலும் நன்மை தரும் .
உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது .
அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது, மற்றபடி ஜப தவங்கள் 
எல்லாம் கர்ம வினைகளை போக்காது . வீட்டிலே இருந்தாலும், 
கோயிலுக்கு போனாலும், கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் 
இல்லாமல் காப்பாற்று, நல்ல சுகத்துடன் வைத்திரு, என மனமாற 
வேண்டிவந்தால் போதுமானது .

கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை
கொண்டு செல்ல வேண்டும். மற்றபடி சம்சாரிகள் மனைவி 
குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி 
நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது .

 
அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல்
 ஏழைகளாக பார்த்து அவர்கள்
வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது 
சிறந்தது.   இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் 
நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.