ஒரே சொல்லை மனதில் வைக்க வேண்டும்.
கோயிலுக்கு போனாலும், ஒரே மனதாக ஒரே நோக்கமாக கேட்டால் கஷ்டங்கள் உடனே தீரும்.
நம்பிக்கை இருந்தால் கேட்காமலேயே கொடுப்பார்.
நம்பிக்கை முழுதாக இருக்க கஷ்டங்கள் தானாக குறையும்.
பிரம்மன் எழுதின எழுத்தை கொஞ்சமாக இடம் (சந்து) இருந்தால் மாற்றலாம். கெட்ட நேரத்தில்
சந்து கிடைக்கும்போது மாற்றலாம். ஆறு மாதத்திற்கு நல்லவன் வரும்போது மாற்றலாம்.
சுவாமிகள் கூறும் தர்மம்.
கோயில் குறையாக நிற்கும் போது பூர்த்தி செய்ய
வேண்டும்.
அன்னதானம்.
கல்யாணம் கட்டுவிப்பது.
தண்ணீர் பந்தல், குடிநீர் வசதி.
சாலை இரு ஓரங்களில் நிழல் தரும் மரங்களை
அமைத்தல்.
சுமைதாங்கி அமைத்தல்.
நம்பிக்கை ஆதார பொருள்.
கடவுள் சோதிப்பார். மறக்கவும் செய்வார்.
செத்தாலும் பிழைத்தாலும் ஒன்றே பிடி. நிலையான நம்பிக்கை வை.
மனதில் நம்பிக்கை ஒரே மனசாக இருந்தால், இந்த கட்டையை
ஆத்மா பிரிக்கிறது.
புண்ணியம் செய்த ஆத்மா ஹிம்சை இல்லமால் பிரிவது
தான் கடைசி காலத்தில் தேவை.
உயிர் பட் என்று போவது புண்ணியம்.
நல்ல உயிர் 48
நாள் இருக்கும்.
பேரன் பேத்தி மேல் ஆசை இருந்தால் தீர்த்தம்
ஊற்று, சாந்தி கிடைத்தவுடன் நின்றுவிடும்.
விடியற்காலையில் படிக்கும் பழக்கம் கொண்டு வருவது குழந்தைகளுக்கு
நல்லது.
வைகுண்ட ஏகாதசி – நல்ல ஜீவன் போன தினத்தை குறிக்கிறது. அந்த நாளை
நினைவு படுத்திக்கொண்டு இருந்தால் சொர்க்கத்துக்கு போவார்கள்.
சரீரத்தில் பஞ்சபூதம் இருக்கிறது.
தாயை நினைத்து ஓம் பராசக்தி துணை என்று எழுது. ஒரு சமயம்
இல்லாவிட்டாலும், ஒரு சமயம் உதவி செய்யும்.