திங்கள், 28 பிப்ரவரி, 2011

மொட்டை அடித்து கொள்வது எதற்கு

இனிய தம்பதிகளுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது.முருகர் சாமியார் உருவம் கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்து பசியாற்றுங்கள் என்றார் , அவர்கள் உணவு பரிமாறும் போது உங்கள் வீட்டு குழந்தையை கூப்பிடுங்கள் என்றார்  அவர்கள் குழந்தையில்லை என்றனர் குழந்தை இல்லாத வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று எழுந்து விட்டார்.தம்பதிகள் இருவரும் காலில் விழுந்து வணங்கி அழுதனர்.நீங்கள் கேட்டபடி பிள்ளைபேறு வரம் அளிக்கிறேன் நீங்கள் பதிலுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்டார்.நீங்கள் கேட்பதை தருகிறோம் என்று அவர்கள் கூறினார்கள் .அதற்கு அவர் உயிர் பொருளை கொடுங்கள் என்றார்.

குழந்தையும் பிறந்தது.சிறிது நாட்கள் கழித்து பேசியபடி உயிர்பொருளை கொடுக்க முருகர் கோயிலுக்கு சென்றனர் பின் குழந்தையை பலியிட்டு தன் நாக்கையும் அறுத்து கொண்டனர் . உடனே முருகர் தோன்றி ஏனப்பா உயிர் பொருளை தானே கேட்டேன் உயிரையா கேட்டேன் என்று கேட்க அவர்கள் உயிர் பொருள் எது என்று அவர்கள் முருகனிடம் கேட்க முருகன் தலைமுடி என்றார். குழந்தை சேவலாக மாறியது .

அதனால் தான்  சேவல் பலிகொடுப்பது , மொட்டை அடித்து கொள்வது .
தலைமுடியும் நகமும் உயிர்போருட்கள் நெருப்புக்கு மட்டும் அழியும் மற்ற எதுவாலும் அழியாது . மொட்டை மூன்றுமுறை அடித்தால் கிரக தோஷம் நீங்கும் மொட்டை சாமிக்கு நேர்ந்து கொண்டு அடித்தால் பாத்து காவு ( பலி ) கொடுப்பதற்கு சமம் என்று கூறுவார் நம் சுவாமி . சுவாமிகள் நகம் வைத்து இருப்பது  மிக்க விசேஷம் எதாவது பெரிய கஷ்டம் வரும்போது சுவாமிகள் உயிர்பொருள் ஆன நகத்தை கொடுப்பார் .                   

கொடிமரம்

 ஒரு ராஜா பெரிய கோயில் ஒன்றை கட்டினான் எல்லா வேலையும் முடிந்துவிட்டது,கொடிமரம் ( கருட கம்பம் ) வைக்க வேண்டும் என்ன செய்தாலும் எவ்வளவு பேர் தூக்கினாலும் அதை நிற்க வைக்க முடியவில்லை .அங்குள்ளவர்கள் தானம் நிறைய செய்தால் கொடிமரம் நின்று விடும் என்று கூறி அரசனை ஏமாற்றி பொன் பொருள் வாங்கி கொண்டார்கள் .அப்போது ஒரு பைத்தியக்காரன் ( நம் சுவாமிகளை  போல் பற்று அற்ற துறவி ) யாராவது அபசாரி தொட்டால் கொடிமரம் தானாகவே நின்றுவிடும் என்று கூற அருகில் இருந்தவர்கள் அபச்சாரம்  அபச்சாரம் என்று கூறினார்கள்.ஒரு நாள் ஒரு பெண் வந்து எல்லோரும் கஷ்டப்படுகிறார்களே என்று நாமும் பொய் தூக்கிவிடலாம் என்று பொய் தொட்டாளாம் உடனே கொடிமரம் நின்று விட்டதாம். எல்லோரும் அவள் காலில் விழுந்து வணங்கினார்கள் அம்மா மகாலட்சுமி நீ யார் ? எந்த ஊர் என்று விசாரிக்கையில் அவள் பக்கத்துக்கு ஊரில் தாசியாக இருப்பதை கூறினாள்.ஆயிரத்துக்கு ஒன்று குறைவாக உள்ள அபசாரி,அபசாரி யாரிடமும் பணம் வாங்காமல் அன்பை கொடுத்ததினால் அந்த சக்தி அவளிடம் இருந்ததாம்.     

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

ராஜா திருந்திய கதை

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான், அவன் காம உணர்வு மிக்கவன்,ஊரில் உள்ள அழகான பெண்கள் யாராக இருந்தாலும் கூப்பிட்டு அனுபவித்து விடுவான்.
ஒருநாள் ராஜாவும் மந்திரியும் குதிரை மீது செல்லும் போது பெண்கள் ஓரிடத்தில் நீர் எடுத்து கொண்டு இருந்தார்கள். எல்லா பெண்களும் ராஜாவை பார்த்து கைகொட்டிச் சிரிக்க ஒரு பெண் மட்டும் சிரிக்காமல் தலையை குனிந்து வீட்டிற்கு சென்று விட்டாள்.அவள் மீது ராஜாவிற்கு ஆசை வந்தது.மந்திரியை அனுப்பி அவளை இரவு ஏற்பாடு செய் என்று கூறினான்.மந்திரி விசாரிக்கையில் புதியதாக மணம் முடித்த பெண்  பக்கத்துக்கு ஊரில் இருந்து வந்துள்ளாள் என்பதை அறிந்தான் அவளின் மாமனாரிடமும் ,கணவனிடமும் தகவல் கூறினான். கணவன் மனைவியிடம் இவ்வூரில் இது போல் நடப்பது நீண்ட நாட்களாக உள்ளது என்றும் நடக்க தவறினால் குடும்பத்தையே கொன்று விடுவான் என்றும் அவளை இரவு ராஜாவின் அரண்மனைக்கு செல்லுமாறு கூறினான் .

மனைவி மந்திரியிடம் நான் ஏழ்மையில் வாழ்ந்தவள் அரண்மனை படுக்கை தனக்கு சரிவராது எனவே ராஜாவை இன்று இரவு இங்கு எங்கள் வீட்டிற்க்கு வரச் சொல்லுங்கள் எனறாள். ராஜாவிடம் இது பற்றி கூறுகையில் எங்கு வேண்டுமானாலும் வருகிறேன் என்றான் .அவள் வீட்டில் உள்ள அனைவரையும் அன்று வெளியே செல்லுமாறு கூறி இரவு ராஜாவிற்காக காத்து கொண்டு இருந்தாள். இரவில் ராஜா அவளை தேடி வந்தான்,வீட்டிற்கு வந்தவனை உபசரித்து பாய் போட்டு உட்கார வைத்தாள்.பின் ராஜாவை பார்த்து முதன் முதலாக   ஏழையின் குடிசைக்கு வந்துள்ளீர்கள் எதாவது சாப்பிட வேண்டும் என்று கேட்டாள்.அவனும் எது கொடுத்தாலும் சாப்பிடுகிறேன் என்று கூறினான் .அவள் காபி  போட்டு ஒரு குவளையில் ( மண்   ) எடுத்து வந்து கொடுத்தாள் அரசனும் இரு மடக்கு குடித்தான். சற்று பொறுங்கள் என்று அவள் கூறி உள்ளே சென்று வேறு ஒரு குவளையில் ( பித்தளை ) காபி எடுத்து வந்து கொடுத்து குடிக்க சொன்னாள். அரசனும் குடித்தான் , அவள் இரண்டிலும் சுவை எப்படி இருந்தது என்று கேட்க ராஜா இரண்டும் ஒரே சுவை உள்ளது என்று கூறினான் . நன்றாக யோசித்து சொல்லுங்கள் என்று அவள் கூற மீண்டும் இரண்டையும் பருகி இரண்டின் ருசியும் ஒன்றே என்று கூறினான். அதற்கு அவள் சரியாக சொன்னீர்கள் மகாராஜா அதே போல் ராணியிடம் இருப்பது தான் என்னிடமும் உள்ளது இரண்டும் ஒன்றுதான் என்றாள்.அப்போதுதான் ராஜாவிற்கு புத்தி வந்தது ,அவளிடம் மன்னிப்பு கேட்டு திருந்தினானாம் .

பெண் மோகம் உள்ளவர்களை சுவாமிகள் யானை மாதிரி அழகான மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி கூத்தியார் வேண்டும் என்று அலைகிறீர்கள் என்று திட்டுவார் .        

 



இராமலிங்க சுவாமிகள்

இராமலிங்க சுவாமிகளின்  அண்ணி ,அண்ணனுக்கு தெரியாமல்  இராமலிங்க சுவாமிகளை வரவழைத்து  அமுதம் அளிப்பார்கள்.அண்ணியின் மேல் அண்ணன் சந்தேகப்பட்டு அண்ணியை திட்டி வெளியே அனுப்பி தாழ்பாள் போட்டார் .அண்ணியாகிய தாய்க்கு தனக்கு தலைவாரி பேன் எடுத்து அழகாகவும் ஒழுங்காகவும் வைத்து இருந்ததற்காக தமையனார் அண்ணியை தண்டித்தற்காக அன்று அடித்து கொண்ட மொட்டைதான் வாழ்நாள் வரை மொட்டையாக மாறிவிட்டார்கள். அண்ணியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கல்யாணம் செய்து கொண்டார்.பின் பந்தத்தை துறந்தார்.

கருங்குழி ரெட்டியார் வீட்டில் சுவாமிகள் இருக்கும் பொழுது விளக்கு அணையாமல் எரிந்துகொண்டு இருக்கும்.தினமும் மாலை 5 மணிக்கு ஒரு குவளை எண்ணெய் கொண்டு வந்து வைப்பார்கள்.ஒருநாள் உறவினர் வீடு விசேஷம் சென்றவர்கள் மலை 5 மணிக்கு வர இயலவில்லை,எண்ணெய் யாரும் வைக்கவில்லை.அந்த அம்மாவிற்கு மிக்க வருத்தம்,அந்த அம்மா வீட்டிற்கு வந்து பார்க்கும் போது விளக்கு எரிந்து கொண்டு இருந்தது அப்போது அந்த அம்மா இராமலிங்க சுவாமிகளிடம் தண்ணீர் விட்டா எரித்தீர்கள் என்று கேட்க தண்ணீர் விட்டா எரித்தேன் ? தன் நீர் விட்டு எரித்தேன் என்றாராம் .தண்ணீர் ( தாயின் சக்தி ) .

ஒரு தாசில்தார் தான தர்மங்கள் நிறைய செய்பவர். அவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்தனர். திருமணம் முடிந்தது.வீட்டிற்கு வந்தவுடன் பெண்டாட்டி திட்டுகிறாள்,இவரை சேர்க்க வில்லை,ஒரு வருடம் இதே போல் இருந்தது. முதல் பெண்டாட்டி சரியில்லை என்று மறுகல்யாணம் செய்தி வைத்தார்கள். அவளும் அப்படியே நடந்துகொண்டாள்.இருவரும் சேர்ந்து கொண்டு திட்டுவார்களாம்,உனக்கு வீட்டில் என்ன வேலை வெளியே போ என்பார்களாம்.தாசில்தார் இராமலிங்க சுவாமிகளிடம் சென்று தம் குறைகளை கூறினார். மூன்று நாட்கள் சுவாமிகளிடம் முறையிட்டு  நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் சாகிறேன் என்றாராம்.அன்று இரவு தாசில்தார் வீட்டிற்கு இராமலிங்க சுவாமிகள் சென்றார் பெண்டாட்டிகள் இருவரும் சுவாமிகளை நமஸ்கரித்து நன்கு கவனித்து கொண்டார்கள், அப்போது புருஷனை வெளியே போ என்று திட்டினார்கள் . இரவு 12 மணிக்கு வெளிநடையில் படுத்து இருந்த சுவாமிகள் இருவர் படுத்து இருந்த அறைக்குள் சென்றாராம் தன் கணவன் தான் வந்து இருக்கிறான் என்று எண்ணி இருவரும் சுவாமிகளின் முதுகில் அடித்தார்கள்,பின்பு பார்கையில் சுவாமிகள் என்று அறிந்து மன்னிப்பு  கேட்டனர்.அப்போதுதான் இராமலிங்க சுவாமிகள் தாசில்தாருக்கு இருந்த பிரமஹத்தி தோஷத்தை வாங்கிகொண்டு தெருவில் பாடிக்கொண்டு சென்றார்களாம். "வீதியிலே சென்றேனடியம்மா ஆனி பொன்னம்பலத்தை கண்ட காட்சி அற்புதகாட்சி"   அதன்பிறகு மனைவிமார்கள் இருவரும் தாசில்தாரை  நன்கு கவனித்து கொண்டார்கள்.குளிப்பாட்டும் போது இருவரும் போட்டிபோட்டு கொண்டு முதுகு தேய்த்து விடுவார்களாம் .

கருங்குழி ரெட்டியார் வீட்டு பையன் சுவாமிகளை நம்ப மாட்டானாம். இராமலிங்க சுவாமிகள் தங்கம் செய்வார் என்று அவரை தங்கம் செய்து கொடுங்கள் என்றும் வைரமாலை வேண்டும் என்றும் துன்புறுத்தினார்கள்  .
இறுதியில் மிகவும் அவர்கள் கஷ்டப்பட்டார்கள். அவர்களின் சந்ததியினர் இன்னும் குறிஞ்சிப்பாடியில் கஷ்டப்படுவதாக நம் சுவாமிகள் கூறினார்கள் .           
              

புதன், 16 பிப்ரவரி, 2011

நம்பிக்கை

ஒருவன் வேலைக்கு எங்கும் போகாமல் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிகொண்டு இருந்தான் .
அவன் மனைவி ஒருநாள் சத்தம் போட்டாள் ஊரில் உள்ள அனைவரும் தினம் கருட தரிசனம்
செய்து  நன்றாக இருக்கிறார்கள் நீங்களும் தினம் கருட தரிசனம் செய்து விட்டு வாருங்கள்
என்றாள். அவனுக்கு கருடன் எப்படி இருக்கும் என்று தெரியாது ஏரிக்கரையில் கருடனுக்காக
காத்து  கொண்டு இருந்தான்,அவனது நேரம் கருடன் வரவே இல்லை கூவை தான் வந்தது .
கூவையை கருடன் என்று நினைத்து கும்பிட்டு வந்தான் . மறுநாளும் மற்றும் தினமும்
கூவையை பார்த்து கும்பிட்டு வந்தவுடன் தான் சாப்பிடுவான் .கூவை இவன் கும்பிடுவதை
சில நாட்கள் கவனிக்கவில்லை,அவன் தினமும் கும்பிடுவதை பார்த்து ஓடி ஒளிந்து கொள்ளும்
ஆனால் அவன் கூவை வரும் வரை சாப்பிடாமல்  காத்திருப்பான் .கூவையும்   மனம் பொறுக்காமல் வந்துவிடும் .ஒரு நாள் கூவை என்னை கும்பிடாதே என்னை கும்பிட்டால் தரித்திரம் தான் வரும் நான் கருடன் அல்ல என்று கூறியது மேலும் கருடன் கழுத்து வெள்ளையாக இருக்கும்,கருடனை கும்பிட்டால்தான் புண்ணியம் என்னை கூவை என்பார்கள் என் முகத்தில் விழித்தால் தரித்திரம் தான் வரும் இனி என்னை கும்பிடாதே என்று கூறியது.அதற்கு அவன் அது எல்லாம் எனக்கு தெரியாது நான் உன்னை நம்பித்தான் கும்பிட்டேன் இனி யாரையும் கும்பிடமாட்டேன் எனக்கூறி மீண்டும் தினமும் கூவையை கும்பிட்டு வந்தான் .கூவை இவனை பார்த்தவுடன் ஓடி ஒளிந்து கொள்ளும் விடாமம் இவனும் தேடி கும்பிட்டுவிட்டுதான் இவன் சாப்பிடுவான்,கூவை கண்ணில் படும் வரை சாப்பிடமாட்டான் .
இப்படி நடக்கையில் கூவை ஒருநாள் இவன் மேல் இரக்கம் கொண்டு  என்மீது நம்பிக்கை வைத்துவிட்டாய் நான் சொல்வது போல் செய் " விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து வீட்டை பெறுக்கி சுத்தம் செய்து அரிசி மாவுக் கோலம் போட்டு விளக்கேற்று , நான்கு அரை  மணியில் இருந்து ஆறு அரை மணிக்குள் இலட்சுமி எப்படியும் உன் வீட்டிற்குள் வந்து பார்ப்பாள் , நான் கதவிற்கு பின் ஒளிந்து இருப்பேன் இலட்சுமி வந்தால் எனக்கு தெரியும் வந்தவுடன் குரல் கொடுப்பேன் என் குரல் கேட்டவுடன் நீ என்னை கத்தியால் அறுத்து உன் வீட்டிற்குள் என்னை புதைத்து விடு என்னை புதைத்தால் இலட்சுமி வெளியேற முடியாது உள்ளுக்குள்ளே வாசம் செய்வாள் பின் நீ எல்லா செல்வமும் பெற்று நிம்மதியாக வாழலாம்" என்று    கூறியது
கூவை கூறியது போல் காலை எழுந்து வீட்டை பெருக்கி கோலம் போட்டு விளக்கேற்றி வைத்தான் .கதவுக்கு பின்னால் கூவை ஒளிந்து கொண்டது, இவனும் கத்தியுடன் தயாராக இருந்தான். இலட்சுமி அந்த பக்கம் வருகையில் சந்தேகம் வந்தது நாம் தான் இவனிடம் இல்லையே வீடு உள்ளே  லட்சுமிகரமாக உள்ளதே என எண்ணி உள்ளே நுழைந்தாள்,கூவை உடன் குரல் கொடுக்க இவன் தாமதம் செய்யாமல் கூவையை அறுத்து வீட்டினுள் புதைத்துவிட்டான்.இலட்சுமியும் வெளியேற முடியவில்லை.             

அதற்குப்பின் அவன் வீடு இலக்ஷ்மிகரமாக இருந்தது பின் மிகுந்த செல்வந்தன் ஆனான், காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து  வீட்டை பெருக்கி கோலம் போட்டு விளக்கு ஏற்ற மறப்பதில்லை. அவனுக்கு பிள்ளை பிறந்து அவனுக்கும் திருமணம் ஆகியது .மருமகள் வந்தவுடன் பெருக்கும் போது கூவையை  புதைத்த இடத்தில்  மேடாக சாணமாக  உள்ளதே என்று தோண்டி அதில்  இருந்த கூவையின் கூடுகளை யாரையும் கேட்காமல் எடுத்து வெளியே போட்டு விட்டாள். மருமகள் காலை எழுவதும் இல்லை வீட்டை பெருக்கி கோலம் போடுவதும் இல்லை அன்றிலிருந்து மீண்டும் அந்த குடும்பத்தில் மீண்டும்  தரித்திரம் பிடித்து கொண்டதாம் .