புதன், 6 நவம்பர், 2024

 ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை

 பசி சுவை அறியாது. நித்திரை சுகம் அறியாது

புதன், 24 மே, 2023

இறைக்கிற கிணறு ஊறும்

 இறைக்கிற கிணறு ஊறும்.

கெட்ட செலவு செய்யாமல் நல்ல செலவு(தர்மம்) செய்தாலும் காசு வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்

புதன், 10 மே, 2023

அன்னதானம்

 

உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது .
அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது, மற்றபடி ஜப தவங்கள் 
எல்லாம் கர்ம வினைகளை போக்காது . வீட்டிலே இருந்தாலும், 
கோயிலுக்கு போனாலும், கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் 
இல்லாமல் காப்பாற்று, நல்ல சுகத்துடன் வைத்திரு, என மனமாற 
வேண்டிவந்தால் போதுமானது .

கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை
கொண்டு செல்ல வேண்டும். மற்றபடி சம்சாரிகள் மனைவி 
குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி 
நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது .

 
அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல்
 ஏழைகளாக பார்த்து அவர்கள்
வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது 
சிறந்தது.   இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் 
நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்

புதன், 26 ஏப்ரல், 2023

காசி

 காசிக்கு போனால் பாவம் போகுமா ?

ஒருவன்    தன் அம்மாவை எட்டி உதைத்து அடித்து விட்டான்.அவனது குருநாதர் பெற்ற

தாயை அடிக்க கூடாது நீ அடித்துவிட்டாய் அது பெரிய பாவம், அந்த பாவம் போக காசிக்கு

சென்று ஒன்பது முழுக்கு முழுக்கு போட்டால் தான் பாவம் போகும் என்றார். காசிக்கு போக

காசு இல்லையே என்று அவன் கூற குரு பிச்சை எடுத்தாவது போ என்றார்.

ஒரு நாள் சாப்பாடு ஏதும் கிடைக்கவில்லை பசி மிகுதியால் ஒரு வீட்டில் களைபாருகையில்

அந்த வீட்டின் மாடத்தில் கொட்டை பாக்கு இருந்தது அதை எடுத்து வாயில் போட்டு மென்றான்.

கொட்டை பாக்கு மெல்லும் சத்தத்தை கேட்டு அவ் வீட்டு பெண்மணி நான் தீட்டு  ஆன

நேரத்தில் வீட்டிற்குள் பாக்கை எடுத்து செல்ல கூடாது என்று மாடத்தில் வைத்து விட்டு

சென்றேன் அதைபோய்  சாப்பிட்டீர்களே என்றாள்.அதை கேட்டு அவன் தலையில் அடித்து

கொண்டு ஒரு பாவத்தை பாவத்தை போக்க காசிக்கு செல்கையில் இன்னொரு பாவம் வந்து

ஒட்டி கொண்டதே என்று கவலைப்பட்டான்.

இனி எங்கு சென்றாலும் எதுவும் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்தான் .மீண்டும் காசி

நோக்கி  பயணத்தை தொடர்ந்தான். அன்று இரவு ஒரு வீட்டிற்கு சென்று தங்கினான். அவ் வீட்டு

பெண்மணி என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்க அவன் எந்த பாலாக இருந்தாலும் பரவாயில்லை

என்று கூறினான் .அவளும் பக்கத்துக்கு வீட்டில் கிண்ணம் கடன் வாங்கி கிண்ணத்தில் பாலை

ஊற்றி  அவனுக்கு கொடுத்தாள். அவனும் குடித்து இன்று எந்த பாவமும் செய்யவில்லை என்று

நினைத்து நிம்மதியாக தூங்கினான். மறுநாள் அதிகாலை பக்கத்துக்கு வீட்டுக்காரன் எனது

சவரக்கின்னத்தை கொடுங்கள் நான் பக்கத்துக்கு ஊருக்கு சவரம் செய்ய செல்ல வேண்டும்

என்றான். நான் பால் குடித்த கிண்ணம் சவரக்கின்னம் என்றால் நான் குடித்த பால் என்ன பால்

என்று கேட்க ? நீங்கள் இருக்கும் வீடு வண்ணான் வீடு அந்த வீட்டு கழுதை கன்று ஈர்ந்து

உள்ளது.தாங்கள் குடித்த பால் கழுதைப்பால் அவர்கள் வீட்டில் பாத்திரம் இல்லாததால்

என்னிடம் வந்து சவரம் செய்யும் கிண்ணத்தை கேட்க நான் கொடுத்தேன் என்று  நாவிதன்

கூறினான்.இதை கேட்டவுடன் தலையில் அடித்துக்கொண்டு ஒரு பாவத்தை போக்கலாம்

என்று காசிநோக்கி வந்தால் வரிசையாக பாவங்கள் வருகிறதே என்று காசி நோக்கி அழுது

கொண்டே சென்றான் .


இன்னொரு ஊரில் ஒரு நாவிதனின் தந்தை இறந்து போனார்அவன் அங்குள்ள

பிராமணர்களிடம் நீங்கள் என்ன செய்வீர்களோ  ஏது  செய்வீர்களோ  தெரியாது எவ்வளவு

பணம் செலவானாலும் பரவாயில்லை எனது தந்தை உயிரோடு வரவேண்டும் என்றான்.

அவர்களும் சவத்தை கொளுத்தி சாம்பலை வைத்து யாகம் செய்தார்கள்.பின்னர் இந்த

சாம்பலை  ஒரு பெரிய பானையில் போட்டு அவன் தலை மேல் வைத்து காசிக்கு சென்று

அங்குள்ள ஆற்றில் தொபுகடீர் என்று போட்டு உடைக்க உன் தந்தை உயிரோடு வருவார்

என்றனர்.

இவனும் தலையில் வைத்துகொண்டு காசிக்கு வந்தான்.அம்மாவை எட்டி உதைத்தவன்

ஆற்றில்   மூக்கை பிடித்து மூழ்கி கொண்டு இருந்தான் அப்போது நாவிதன் அவன் தலையில்

பானையை போட்டான்.பானை உடைந்து அவன் தலை தெரிந்தது. ஐயர்களை வைத்து பூஜை

செய்ததால்   அப்பா  ஐய்யர் ஆகவே வந்துவிட்டார் என்று நினைத்து அவனை அவனது

ஊருக்கு கூட்டி சென்று  நீ எனக்கு சிறு வயதில் ஊட்டி விட்டாய் இப்போது நான் ஊட்டி

விடுகிறேன் என்று மாமிச உணவுகளை வாயில் திணித்தான். விட்டால் போதும் என்று

அவன் ஊரை   நோக்கி ஓட்டம் விட்டான்.திரும்பும் வழியில் நம் சுவாமிகளை போல் ஒருவரை சந்தித்து காசி சென்ற விவரம் கூறினான். அதற்கு அவர் அம்மாவை 

எட்டி உதைத்தால் அதற்கு ஏன் காசிக்கு செல்ல வேண்டும் அம்மாவை நிற்க வைத்து மூன்று

முறை  சுற்று  சுற்றி காலில் விழுந்து தாயிடம்  மன்னிப்பு கேட்டால் போதுமே என்று

கூறினாராம்   அவனும் அவ்வாறே செய்தானாம்.


கதையின் கருத்து : செய்த தவறுக்கு மனம் வருந்தி மனதார மன்னிப்பு கேட்டால் போதுமானது.

காசிக்கு போனாலும் பாவம் போகாது .

புதன், 15 மார்ச், 2023

பகிர்ந்து உண்டால் பசி ஆரும். தானே தின்றால் வீணா போகும்

செவ்வாய், 14 மார்ச், 2023

மற்றவர்களுக்கு நல்லது செய்யா விட்டாலும், கெட்டது செய்யாமல் இருக்க வேண்டும்.